உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்கிற்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நகரத்திற்கான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பொருட்களை வழங்குவது மற்றும் பொதுமக்கள் வெளியேற்றுவதும் கடினமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைனின் கிழக்கு நகரத்தில் கடுமையான போர் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு ரஷ்ய பீரங்கி படையினர் வெளியேற்றியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல வாரங்களாக செவெரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இராணுவ இலக்காக இருந்த நிலையில் அனைத்து பாலங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் நகரத்தின் 70 விகிதமான பகுதிகள் இப்போது ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.