2019 இல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்றுவதற்கான திட்டங்களை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கிரேட் பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்திற்குச் பொருட்களை எடுத்துச் செல்வதை எளிதாக்கும் முயற்சியில் வடக்கு அயர்லாந்து அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்ற போதும் ஒப்பந்தத்தில் திரும்பப் போவது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் கண்டித்துள்ளது.
இருப்பினும் நாட்டின் அத்தியாவசிய நலன்களைப் பாதுகாப்பதை தவிர தமக்கு வேறுவழியில்லை என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்ற மாநிலங்களின் அத்தியாவசிய நலன்களை தீவிரமாக பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில் முன்னெடுக்கப்படவுள்ள மாற்றங்கள் வடக்கு அயர்லாந்தில் சட்டமூலமாக கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வாக்களிப்பும் இடம்பெறவுள்ளது.
இருப்பினும் இதனை சட்டமாக்க முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.