இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிஸிற்காக 7 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி 238 ஓட்டங்கள் முன்னிலையோடு மேலும் 3 விக்கெட்கள் கைவசமிருக்க நியூசிலாந்து அணி இன்று 5 ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி தனது தனது முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 553 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 539 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.