நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டிலுள்ள 17 சதவீதமான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதான ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் மக்கள் உணவை பெற்றுக்கொள்ள ஏற்பட்டுள்ள தடையே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு இலட்சம் சிறுவர்களும், ஏழு இலட்சம் பாடசாலை மாணவர்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலாக, கல்சியம் குறைபாடு சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சுமார் 50 சதவீதமான குழந்தைகள் கல்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும், இது ஒரு புதிதாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.