பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் சட்ட பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தாமதமான தலையீட்டை அடுத்து விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த மாதம் நடைபெறும் விசாரணையில் இந்த விடயம் முழுமையாக ஆராயப்படும் வரை யாரையும் விமானத்தின் மூலம் அனுப்ப கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரத்து செய்யப்பட்டமை ஏமாற்றத்தை தந்துள்ளதாக உள்துறைச் செயலாளர் பிரிதி படேல் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ருவாண்டாவிற்கு அனுப்பும் செயற்பாடு எவ்வளவு ஆபத்தானது என்பதை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீடு காட்டியுள்ளதாக டிடென்ஷன் அக்ஷன் என்ற பிரச்சாரக் குழு கூறியுள்ளது.