கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரசாயன ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் பொதுமக்கள், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மனிதநேயக் கொள்கையை ரஷ்ய பாதுகாப்புத் துறை பின்பற்றுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு வழித் தடம் ஏற்படுத்தப்படுகிறது
லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான செவெரோடொனட்ஸ்கையும் அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றினால், அந்த மகாணம் முழுவதும் ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.