பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் அரசாங்க அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதுடன் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் நீண்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல நாணயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவை பிரதமர் கோரியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.