பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு இணைய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகளையும் பொது சேவையையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.