உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
‘ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப வாழ உக்ரைன் தனது விருப்பத்தையும் உறுதியையும் தெளிவாக நிரூபித்துள்ளது’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.
பின்னர் ஒரு ட்வீட்டில், ‘ஐரோப்பியக் கண்ணோட்டத்திற்காக உக்ரேனியர்கள் இறக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் எங்களுடன் ஐரோப்பியக் கனவுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’ என உர்சுலா வான் டெர் லேயன் பதிவிட்டுள்ளார்.
அடுத்த வியாழன் மற்றும் வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத் தலைவர்கள் இந்த பரிந்துரையில் கையெழுத்திட இந்த முடிவு வழிவகை செய்கிறது.
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆணையத்தின் நடவடிக்கையை வரவேற்று, இது ஒரு ‘வரலாற்று முடிவு’ என்று கூறினார்.
மேலும் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உக்ரைனின் வேட்பாளர் நிலை குறித்த நேர்மறையான ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முடிவை நான் பாராட்டுகிறேன். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பாதையில் இது முதல் படியாகும், இது நிச்சயமாக எங்கள் வெற்றியை நெருக்கமாக கொண்டு வரும்’ என பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்தை நாடி வருகின்றது. ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஒன்றியத்தில் சேர முறையாக விண்ணப்பித்துள்ளது.