தாம் முன்மொழிந்த சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால், நிலவும் நெருக்கடிக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் அமைத்தால் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என அரசாங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும் அதுவே சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டார்.
ஆகவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவுடன் 15 அமைச்சர்களை உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு தாம் தயார் என்றும் கூறினார்.
கடந்த மூன்று வருட கால அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இழந்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.