அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் பல விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமானதையடுத்து, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சமர்ப்பித்தார்.
அதன்படி, 21வது திருத்தத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அந்த சரத்துகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.