ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தாம் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செ்வவாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் இன்று தோல்வியடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது இரண்டரை வருட சர்வாதிகார ஆட்சியின் விளைவே என்றும் இன்று அரசாங்கம் முன்வைக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.