நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (செவ்வாய்க்கிழமை) சபையில் அறிவித்தார்.
நாட்டில் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு நாடாளுமன்ற அமர்வில் உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் தாம் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதாக தேசிய மக்கள் சக்தியும் அறிவித்துள்ளது.
சபையில் உரையாற்றிய கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயம் குறித்து அறிவித்தார்.
நாடாளுமன்றம் மக்களின் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தாத இடமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.