பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுத் தொடரில், குத்துச்சண்டை பிரிவில் பங்குபெற கிளிநொச்சியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
குத்துச்சண்டை அணியில் தெரிவாகியுள்ள விட்டாலிஸ் நிக்லஸ், தேசியப்போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார்.
தற்போது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் பங்குபற்றி சாதிப்பதன் மூலம் இலங்கைத் தமிழர் என்ற செய்தியை உலகறிய செய்வதுடன், நாட்டிற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து கொடுப்பதே தனது இலட்சியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுத் தொடர்,
எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 08ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களை பெறவுள்ளனர்.