ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட இந்த அறிக்கையை அன்றைய தினமே ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த ஆனைக்குழுவின் தலைவர் ஞானசார தேரர் உள்ளிட்ட அந்த ஆனைக்குழுவின் உறுப்பினர்களினால் ஒப்படைக்கும் திகதி மறுபரிசீலனை செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த இறுதி அறிக்கையில் அதன் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி, மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.