இலங்கைக்கும் மேலதிகமாக 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியமைக்காக அமெரிக்காவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பிற்காக மேலதிகமாக 20 மில்லியன் டொலரை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று ஜீ 7 மாநாட்டில் அறிவித்தார்.
இவை எதிர்வரும் 15 மாதங்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள், 27 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்தான உணவை வழங்க இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.