கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடியவர்களில் 261 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன், அங்கிருந்து 500 இற்கும் மேற்பட்டோர் தப்பியோடியிருந்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், குறித்த மோதல் சம்பவத்தில் தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பொலன்னறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மோதலில் 600 கைதிகள் தப்பியோடி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவ்வாறு தப்பியோடிய கைதிகளில் 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.