வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சேவைகள் இன்று(வியாழக்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களுக்கும் குறித்த நடைமுறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.