உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை 2.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்துகின்றது.
மேலும், பிரித்தானியா மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக 1.5 பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது.
புதிய பிரித்தானிய உதவியானது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், எலக்ட்ரானிக் போர் உபகரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கிட்களுக்கு பணம் செலுத்துவதை நோக்கி செல்லும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு மேலும் உதவுமாறு நேட்டோ தலைவர்களை ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியதை அடுத்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உக்ரைனுக்கான மாதாந்திர பாதுகாப்புச் செலவு சுமார் 5 பில்லியன் டொலர்கள் (4.12 பில்லியன் பவுண்டுகள்) என ஸெலென்ஸ்கி நேட்டோ தலைவர்களிடம் கூறினார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியின் அடிப்படையில் பிரித்தானியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆதரவுப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.