19வது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22வது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இது குறித்த விரிவான கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
22 ஆவது திருத்தம் ஒரு பெரிய படி என்றும், 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, அரசியலமைப்பு சீர்திருத்தங்களை பொதுமக்கள் கோரவில்ல என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கம் அமுல்படுத்திய சில நடவடிக்கைகளை ஆம்பத்தில் இருந்தே தான் விமர்சித்ததாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதியின் செயலாளர் நியமனம், அஜித் நிவாட் கப்ரால் நியமனம் மற்றும் வரிச் சலுகைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் உரக் கொள்கைகளை தாமும் விமர்சித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி மக்கள் வீதியில் இறங்கிய போது, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை மட்டுமே விமர்சித்ததாக விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.