நாவலப்பிட்டி கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் மோசடி இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் குழுவொன்று நாவலப்பிட்டி கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
ஒரு லீற்றர் பெற்றோல் ஆயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் அதேவேளை, மண்ணெண்ணெய் போத்தல் ஒன்று பொது மக்களுக்கு 200 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த மோசடி தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் தகவல் தெரியாதது போன்று செயற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த எரிபொருள் மோசடி காரணமாக நாவலப்பிட்டியில் உள்ள அரச ஊழியர்களும் எரிபொருளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரச ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.