யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் என்ஜின்கள், தரை இலக்குகளைத் தாக்கும் ‘க்ரூஸ்’ வகை ஏவுகணைகள் ஆகியவற்றை பிரித்தானிய கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யேமனின் ஹூதி கிளரடச்சியாளர்களுக்காக அந்த ஏவுகணைகள் அனுப்பப்பட்டிப்பதாகவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அதிநவீனமான ஆயுதங்கள் அனுப்பி, அவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவி அளிப்பதற்கான வலுவான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.