இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை செலுத்துவதற்காக திறைசேரியிடம் 217 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது.
இந்த கோரிக்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழங்குவதா இல்லையா என்பது நாணயச் சபையினால் தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு திறைசேரியிலிருந்து தேவையான பணத்தை வழங்கத் தவறினால், அதனை இலங்கை மத்திய வங்கி வழங்குவதற்கு நிதிச் சபையின் அனுமதி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாணயச் சபையின் அனுமதியுடன் கடந்த வாரம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மத்திய வங்கி 18.5 பில்லியன் ரூபாவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.