ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஷின்சோ அபே உயிரிழந்ததாக என்று லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
67 வயதான, ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, பிரச்சார உரையின் போது இன்று (வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றது தொடர்பாக, 40 வயதான நாராவைச் சேர்ந்த யமகாமி டெட்சுயாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக, பொது ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, பொலிஸ்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார்.