அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கமான அரசாங்கமொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்காலத்திற்கான தெளிவான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த தீர்மானம் எட்டப்பட்டது.














