உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி விமானங்களை ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.
தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷ்ய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்து ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ஆலோசிக்க உள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.