எப்.பி.ஐ.இன் பணிப்பாளர் கிறிஸ்டோபர் வரே மற்றும் பிரித்தானியாவின் எம்.ஐ இன் பணிப்பாளர் ஜெனரல் கென் மக்கலம் ஆகியோர் சீன அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சீனாவின் திருடப்பட்ட தனியார் துறை வர்த்தக இரகசியங்களைப் பாதுகாக்க அரசாங்க நிறுவனங்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டனில் வணிகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய வரே, ‘எமது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய, நீண்டகால அச்சுறுத்தலாக சீன அரசாங்கம் உள்ளமையை நாங்கள் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். எமது என்று குறிப்பிடுவதானது, நட்புநாடுகள் மற்றும் ஐரோப்பிய பிராந்திய நாடுகள் ஆகியவற்றையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிநவீன வணிகர்கள் பலர் உணர்ந்ததை விடவும் சீன அரசாங்கம் மேற்கத்திய வணிகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
சீன அரசாங்கம் தொழில்நுட்பத்தைத் திருடுவதற்குத் தயாராக உள்ளது. அத்துடன் வணிகத்தைக் குறைத்து ஆதிக்கம் செலுத்துவதற்கு முனைகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறுவனங்கள் சந்தேகிக்காத இடத்தில் செல்வாக்கு மற்றும் அணுகலைப் பெறுவதற்காக சீனா அடிக்கடி மாறுவேடமிட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ரே சீனாவிற்கு வெளியே, அவர்களின் அரசாங்கம் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கான அமெரிக்கக் குழு, அரசாங்க முதலீட்டுத் திரையிடல் திட்டங்கள் ஆகியவற்றிலான முயற்சிகளை மறைப்பதற்கு விரிவான செயற்றிட்டங்களை முன்னெடுகிறது என்றும் அவர் கூறினார்.
சீன அரசாங்கம் பொருளாதார நன்மையைப்பெற முயற்சிப்பதற்காக தனியுரிம தகவல்களை திருடும் நீண்டகால நடைமுறையைக் கொண்டுள்ளது.
அத்துடன், சீனாவின் அச்சுறுத்தலுக்காக கூட்டாண்மை மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வணிகத் தலைவர்கள் எப்.பி.ஐ மற்றும் எம்.ஐ.5 ஆகிய தரப்புக்களுடன் கூட்டுசேர்வதன் மூலமாக இந்த அச்சுறுத்தலைப் பற்றிய தகுந்த உளவுத்துறை தகவல்களைப் பெறமுடியும்.
சீனா பிற தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து தனியுரிமத் தகவல்கள் திருடப்படும் அபாயம் காணப்படுகின்றதா என்பதையும் மதிப்பீடு செய்வது பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சீன அரசாங்கம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளிப்படும் எதிர் உளவுத்துறை மற்றும் பொருளாதார உளவு முயற்சிகள் அமெரிக்காவின் பொருளாதார நல்வாழ்வு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்று எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு முகவரங்களின் தகவல்களின் படி, சீனாவுக்கு மிகவும் சாதகமான கொள்கைகளை அடைய, சட்டமியற்றுபவர்கள் மற்றும் பொதுக்கருத்தைப் பாதிக்கும் தந்திரங்களை சீன அரசாங்கம் பயன்படுத்துகிறது.
அதேநேரத்தில், சீன அரசாங்கம் கொள்ளையடிக்கும் கடன் மற்றும் வணிக நடைமுறைகள், அறிவுசார் சொத்துக்களின் முறையான திருட்டு மற்றும்இணைய ஊடுருவல்கள் மூலம் உலகின் மிகப்பெரிய வல்லரசாக மாறமுயல்கிறது.
சீனாவின் முயற்சிகள் வணிகங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்டுள்ளன.
மேலும் சமூகத்தின் முழு பிரதிபலிப்பு தேவைப்படும். அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து இந்த அச்சுறுத்தலை நன்கு புரிந்துகொண்டு எதிர்கொள்வதற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.