இந்திய கடன் வசதியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உரம் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரத்தின் தரம் குறித்து மூன்று வெளிநாட்டு ஆய்வகங்களில் இருந்து இரசாயன அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உரத்தில் பையூரெட் அளவு 1% க்கும் குறைவாக இருப்பதாக விவசாய அமைச்சின் அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
தேசிய உரச் செயலகத்திடம் இருந்து தரச் சான்றிதழும் பெறப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும் லொறிகள் மூலம் உரம் விநியோகிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.