கொழும்பு – புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 29 வயதானஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.