ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியது என வெளியாகிய செய்திகள் ஆதாரமற்றவை என கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவுக்கு இன்று அதிகாலை சென்றுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவிற்கு செல்லும் முயற்சியாக பசில் ராஜபக்ஷவும் இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.