யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இந்த நிலையிலேயே அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.