• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் ரணில் விக்கிரமசிங்க

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்(வியாழக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.

இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமையேற்ற பின்னர், தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

ஜனாதிபதி பதவிக்கு  போட்டியிட்ட  டலஸ் அழகப்பெருமவுக்கு  82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும்  வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால்,  பதவி காலம் முடிவடைவதற்கு   இரண்டவரை வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் – ஜுலை 14 ஆம் திகதி அவர் பதவி விலகினார்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதனால் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும் பொறுப்பு, நாடாளுமன்றம் வசமானது.

இதன்படி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் நேற்றுமுந்தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல்  செய்தனர்.

போட்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பின்வாங்கினார்.

தமது கட்சி – கூட்டணியின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு என அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

நேற்றுமுந்தினம் போலவே நாடாளுமன்றத்தை சூழ நேற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெற வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவிப்பு விடுத்தார்.

வாக்குச்சீட்டை படமெடுப்பதும், காட்சிப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமென சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற மரபுகளை முறையாக பின்பற்றி, வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

சபைக்குள் தொலைபேசி பயன்பாட்டுக்குள் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற செயலாளரே நேற்று தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்பட்டார். வாக்களிப்பு நடைமுறைகளை அவர் விவரித்தார். அதன்பின்னர்  முற்பகல் 10.24 மணியளவில் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது.

11.45 மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. அதன்பின்னர் வாக்கெண்ணும் பணி இடம்பெற்றது.

நண்பகல் 12.40 மணியளவில்  தேர்தல் முடிவை  தெரிவத்தாட்சி அலுவலராக, நாடாளுமன்ற செயலாளர் சபைக்கு அறிவித்தார்.

இதற்கமைய 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் மேல் ரணில் பெற்றதால், அடுத்த தேர்வுகளுக்கு செல்ல வேண்டிய தேவை எழவில்லை.

வாக்கெடுப்பு தினத்தில் சபைக்கு கட்டாயம் வருமாறு தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிகள் பணிப்புரை விடுத்திருந்தன.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் 1993 இல் ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றம் வசமானது.

பதில் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: புதிய ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை

Next Post

பதவியினை இராஜினாமா செய்கின்றார் தம்மிக்க பெரேரா?

Related Posts

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

2026-04-23
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!
இலங்கை

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

2026-04-23
13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
Next Post
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப் பிரமாணம்?

பதவியினை இராஜினாமா செய்கின்றார் தம்மிக்க பெரேரா?

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியாக இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக்- லிஸ் ட்ரஸ் இடையே நேரடிப் போட்டி!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக்- லிஸ் ட்ரஸ் இடையே நேரடிப் போட்டி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

0
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

0
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

0
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.