கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாத்திரமே கிளிநொச்சியில் உள்ள நிலையில் 2 வாரம் எரிபொருள் மக்களிறகு கிடைக்கவில்லை.
நாடு முழுவதும் இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர்.
இன்று காலை முதல் இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு எரிபொருள் எடுத்து வரப்படவில்லை.
மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு காத்திருக்கும் மக்களிற்கு இன்று மாலை எரிபொருள் வழங்கக் கூடியதாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.