கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பேர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாளிகையின் சுவர்களில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த 40 பித்தளை பொருட்களை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் குழு முற்றுகையிட்டபோது குறித்த நபர்கள் பொருட்களை திருடியுள்ளனர்.
சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.