2024 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி அதற்கு பதிலாக தனது சொந்த நிலையத்தை உருவாக்கப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏனைய நாடுகளுடன் இணைந்து 1998 முதல் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்து பணியாற்றி வருகின்றன.
ஆனால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்த உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவின் விண்வெளி நிறுவன புதிய தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐந்து விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த கூட்டு திட்டம், 1998 முதல் பூமியைச் சுற்றி வருகின்றதோடு ஆயிரக்கணக்கான அறிவியல் சோதனைகளை நடத்த பயன்படுத்தப்பட்டது.
எனினும் உடன்படிக்கையுடன் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்க அமெரிக்கா விரும்புகின்ற நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பின் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து அமரிக்க விண்வெளி நிறுவனத்துக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிக்கவில்லை என ரஷ்யாவின் விண்வெளி நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.