• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மிகவும் மோசமடையும் பாகிஸ்தானின் பொருளாதாரம்!

மிகவும் மோசமடையும் பாகிஸ்தானின் பொருளாதாரம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/28
in உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நீடித்துவரும் உக்ரைன் – ரஷ்யா மோதல்கள் வளர்முக நாடுகளின், குறிப்பாக பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அடிப்படைகளையே பாதித்துள்ளது.

ஜே.பி.மோர்கன் சேஷ் அன்டகோவின் ஆய்வாளர்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ரஷ்யாவை பழிவாங்கும் வகையில் எண்ணெய் கொள்வனை குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கான அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தனர்.

லண்டன் தினசரி 3 மில்லியன் பீப்பாய் விநியோகத்தை குறைப்பதானது, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையை 190அமெரிக்க டொலராக உயர்த்தும், அதேசமயம் 5 மில்லியனான குறைக்கின்றபோது ஒரு பீப்பாயின் விலை 380 அமெரிக்க டொலர்கள் மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.

இது இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியை விட இஸ்லாமாபாத்தை மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது, எண்ணெய் பீப்பாயின் விலை 100 அமெரிக்க டொலருக்கு மேலாக இருக்கும் நிலையில், இஸ்லாமாபாத் மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

குறிப்பாக, பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் எல்.என்.ஜி லிமிடெட் ஜூலை ஏற்றுமதிக்கான கொள்முதல் கேள்விப்பத்திரத்தினை அதிக விலையைக் காரணம் காட்டி இரத்து செய்ததன் மூலம் நெருக்கடியை வெளிப்படைய உணரக்கூடியதாக உள்ளது.

இஸ்லாமாபாத்துக்கு பொருளாதார சவால்கள் பல அதிகரித்து வருகின்றன. அதிக பணவீக்கம், சரியும் அந்நிய செலாவணி கையிருப்பு, நடப்புக் கணக்கு பற்றாக்குறையை விரிவுபடுத்துதல் மற்றும் நாணயத்தின் மதிப்பு குறைதல் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாக உள்ளன.

பாகிஸ்தானின் வர்த்தகப் பற்றாக்குறை, வெளிச்செல்லும் நிதியாண்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 48.66 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது, எதிர்பார்த்ததை விட அதிகமான இறக்குமதியின் காரணமாக முந்தைய ஆண்டை விட 57சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் மே மாதத்தில் 800 இற்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது. உக்ரைனில் நடந்து வரும் போரினால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் மற்றும் பொருட்களின் விலைகள் உயர்ந்தமையால் இந்த முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது.

பாக்கிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டம் தற்போது அரசாங்கத்திற்கு பெரும் பொறுப்பாக மாறியுள்ளது.

சீனாவானது, சுதந்திர மின் உற்பத்தியாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நகர்த்துவதால் அரசாங்கத்தின் வருவாய் குறைவடைகின்றது.

தவிரவும், நாடு தொடர்ந்து மின் தடைகளை எதிர்கொள்கிறது. உலகெங்கிலும் சீன மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறும் மிகப்பெரிய நாடாக பாகிஸ்தான் இருந்தாலும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டத்தின் முன்னேற்றங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிடும்படியாக இல்லை. அத்துடன் சில தருணங்களில் இடைநிறுத்தப்பட்ட பதிவுகளும் உள்ளன.

ஜீன் மாதத்தில் பணவீக்க வீதம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், சமீப காலங்களில் மிக அதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் பகிஸ்தானில், 50 ரூபாய் எண்ணெய் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன்,  33 நாட்களில் பெற்றோல் விலை 149 ரூபாவிலிருந்து 249 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனைவிடவும், மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஏற்கனவே மின் பற்றாக்குறையால் தத்தளிக்கும் பாகிஸ்தானால் முகாமை செய்துகொள்ள முடியவில்லை.

ஏற்கனவே பணவீக்கம் அதிரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

இதற்கிடையில், அத்தியாவசிய இறக்குமதிகளும் அந்நிய செலாவணி கையிருப்பில் குறைகிறது. 2021-22 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் பாகிஸ்தானின் சமையல் எண்ணெய் இறக்குமதி 3.56 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 44சதவீதம் அதிகமாகும். இது மூன்று வருட சர்வதே நாயண நிதியத்தின் கடன் திட்டமான 6 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 60சதவீதத்திற்கு சமமாக உள்ளது.

சமையல் எண்ணெயின் விலையானது உள்நாட்டு சந்தையில் லிற்றருக்கு 550ரூபாவாக உள்ளது. முன்னதாக ஜனவரி 2019இல் லிற்றருக்கு 200 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தானின் மத்திய வங்கியின் கூற்றுப்படி, ‘உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவதற்கு சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து உணவுகளை இறக்குமதி செய்வதில் பாகிஸ்தானின் நம்பிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகரித்து வருகிறது. 2020 இல் உள்நாட்டு சமையல் எண்ணெய் நுகர்வு 86சதவீத இறக்குமதியில் தங்கியிருந்ததோடு இது 2000இல் 77சதவீதமாக இருந்தது.

பாகிஸ்தானில் மக்கள் தொகை மற்றும் தனிநபர் வருமானம் அதிகரிப்பதன் மூலம் இறக்குமதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதேநேரத்தில் நாட்டில் பனை மற்றும் சோயாபீன் செடிகளை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டங்கள் திருப்திகரமான முடிவுகளை வழங்கத் தவறிவிட்டன என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தானின் புகழ்பெற்ற வங்கியாளர் யூசப் நாசரின் கூற்றுப்படி, இஸ்லாமாபாத் மற்ற எந்த நாட்டையும் விட அதிக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிப்பொதிகளைப் பெற்றுள்ளது.

எந்தவொரு அரசாங்கமோ, குடிமக்களோ அல்லது இராணுவமோ, பாகிஸ்தான் பொருளாதாரத்தில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யாததால், பொதுமக்கள் தரப்பு எப்போதுமே பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது.

அரசாங்கம் வழங்கும் வளர்ச்சிப் புள்ளிவிபரங்கள் பெரும்பாலும் தவறானவை. மேலும், வளர்ச்சி நுகர்வு மற்றும் இறக்குமதியால் வழிநடத்தப்படுகிறது. ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் வழிநடத்தப்படாத எந்த வளர்ச்சியும் சாத்தியமானது கிடையாது என்பதே யதார்ததம்.

இஸ்லாமாபாத் இப்போது சர்வதேச கடன் வழங்குபவர்களின் கதைகளை கேட்காத நிலைக்கு வந்துள்ளது. மேலும், நிதிப் பிணை எடுப்புக்கான உதவிப் பொதிகளைத் தேடும் நடவடிக்கைகளும் சுருங்கி வருகிறது.

எடுத்துக்காட்டாக, 5 – 10 வருட கால இடைவெளியில் பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளிடமிருந்து பிணை எடுப்பதற்கான உதவியாக நிதியை நாடியிருந்தால், இப்போது அந்த நெருக்கடிகள் குறைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் பாகிஸ்தானின், கட்டமைப்பு பலவீனங்கள் தவிர, அமைப்பில் உள்ள திறமையின்மை மற்றும் ஊழல்கள் இந்தச் செயற்படுகள் முன்னெடுக்கப்படாமைக்கு காரணமாகின்றன.

அரசாங்கத்துறைகளில் ஊழலைத் தடுக்கும் நோக்கில் தற்போதுள்ள அனைத்து சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய ஊழல் எதிர்ப்பு பணிக்குழுவை அமைக்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நாணயநிதியம் கேட்டுக்கொண்டது.

கடந்த 13 – 14 ஆண்டுகளில், எரிசக்தி விநியோக நிறுவனங்கள், பாகிஸ்தான் ரயில்வே மற்றும் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஏற்பட்ட இழப்புகள், அதன் பொருளாதாரத்தில் அதிகளவான செல்வாக்கினைச் செலுத்தியுள்ளன.

இந்நிலையில், உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்தியில ஏற்றுமதிகளின் நிரந்தர சரிவு, அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது.

வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பதிலாக அதிகலாபம் தரும் ரியல் எஸ்டேட் துறையில் பணக்கார வர்க்கத்தினர் முதலீடுகளைச் செய்கிறார்கள்.

கோபம் மற்றும் குற்றச் செயல்களின் உச்சத்தில் இருக்கும் தொழிலாளர் தொகுப்பை உள்வாங்குவதற்கு பாகிஸ்தானில் தனியார்துறை போதுமான வேலைகளை உருவாக்கவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் பாகிஸ்தான் பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்படலாம் என்று கூறுகிறது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 – 21 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

எனவே, தனிநபர் வருமானம்,இந்தக் காலகட்டத்தில் 2சதவீதம் குறைந்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தேசிய உற்பத்தி திறன் குறைந்துள்ளதாகவும், கட்டமைப்பு குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

தற்போதைய சர்வதேச நாயண நிதியத்தின் மீட்சிக்கான பிணை எடுப்பு நிதியுதவி இருந்தபோதிலும், இஸ்லாமாபாத் மிகவும் கடினமான பாதையிலேயே உள்ளது.

முக்கியமாக கடந்த 70ஆண்டுகளில் நாடு மிகவும் மோசமாக நிர்வகிக்கப்பட்டதன் காரணமே தற்போதைய நிலைமைக்கு அடிப்படைக்காரணமாகின்றது.

Related

Tags: உக்ரைன்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் – கோடீஸ்வரன்

Next Post

இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!

Related Posts

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
உலகம்

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு

2026-01-28
2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!
உலகம்

2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ள உலக அழிவு கடிகாரம்!

2026-01-28
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

2026-01-28
ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஈஸிஜெட் நிறுவனம் விமானப் பயணங்களில் பெரிய கைப்பை குறித்த விளம்பரம் நம்பகத்தன்மையற்றது – ஒழுங்குமுறை ஆணையம் குற்றச்சாட்டு!

2026-01-28
இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

2026-01-28
Next Post
இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!

இளவாலையில் முகமூடி கொள்ளை - இருவர் கைது!

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம் – மனோ கணேசன்!

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம் - மனோ கணேசன்!

சஜித் பிரேமதாசவை சந்தித்தனர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் !

சஜித் பிரேமதாசவை சந்தித்தனர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் !

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

0
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28

Recent News

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.