அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம், நாடாளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது அவசரகால சட்டத்திற்கு எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
குறிப்பாக டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிராக வாக்களித்திருந்தனர்.
இந்தநிலையிலேயே அவர்களுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.