ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த சீனத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
”ஒரு சீனா கொள்கை” தொடர்பில் இலங்கையின் கடைபிடிப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தினார்.
“தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்.
பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு ஒரு முக்கிய அடிப்படையாக அமையும்” என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.