ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக செயற்படுவதாக தூதுவர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, சிவில் – மனித உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் முக்கியமானவை எனவம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஜீ.எஸ்.பி பிளஸ், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்னெடுக்கப்படும் பிரதான செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.