காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று (வியாழக்கிழமை ) கைது செய்யப்பட்டதுடன் அதிபர் தலை மறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.
இந்த நிலையில் குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு கேட்டு 3 பிரம்புகளை ஒன்றினைந்து குறித்த சிறுவன் மீது தாக்கியள்ளார் இதனையடுத்து வீடு சென்ற சிறுவன் மீது தளும்புகளை கண்டு பொற்றோர் அவனிடம் விசாரித்ததையடுத்து தன்னை அதிபர் அடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்த குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை ) முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்துள்ள ஆசிரியயை ஒருவரை கைது செய்ததுடன் அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் விசாரணைப் பிரிவினார் மேற்கொண்டுவருகின்றனர்