நெல் அறுவடையின் போது, விவசாயிகளுக்கு பிரச்சினையின்றி எரிபொருளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் ஏகபோகத்தை வரும் பருவத்தில் இருந்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.