சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது.
கதாநாயகிகளின் புகைப்படம் பட ‘போஸ்டர்’களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ ” என தெரிவித்துள்ளார்.