கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள உய்குர் சமூகத்திற்கு எதிரான சீனாவின் அட்டூழியங்களை முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு முன்பாக, கிழக்கு துர்கிஸ்தானின் நாடு கடந்த அரசு, கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் மற்றும் சுதந்திர கசாக்ஸ் அமைப்பு ஆகியன இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தப்போராட்டத்தின் போது, உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய மக்களுக்கு எதிரான சீனாவின் இனப்படுகொலை அறிக்கையை வெளியிடுமாறு ஐ.நா.விடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஐ.நா.அமைப்பை சீனா கையாள அனுமதிக்க வேண்டாம் என்று ஐ.நா. மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,’ என நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகம் முன்பாக போராட்டம் நடத்திய குறித்த தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
கிழக்கு துர்கிஸ்தானில் நடந்து வரும் சீனாவின் இனப்படுகொலையை புறக்கணிப்பதை ஐ.நா. நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம், மேலும் கிழக்கு துருக்கிஸ்தானில் நடந்து வரும் சீனாவின் இனப்படுகொலை குறித்த அறிக்கையை ஐநா உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் அவர்கள் குறிப்பிட்டனர்.
2014 மே மாதம் கிழக்கு துர்கிஸ்தானுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் வருகையைத் தொடர்ந்து உய்குர், கசாக், கிர்கிஸ் மற்றும் பிற துருக்கிய மக்களை இலக்காகக் கொண்டு இனப்படுகொலைச் செயற்பாடுகளை சீன ஆரம்பித்திருந்தது.
மில்லியன் கணக்கான துருக்கிய இன மக்கள் வதை முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் அடிமைத் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் அத்துடன் அவர்கள் மீது சித்திரவதை, வலிந்த மத, மொழி கற்பிப்பு, கற்பழிப்பு, கட்டாய கருத்தடை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தச் செயற்பாடுகள் தற்போதும் தொடருகின்றன.
‘ஐ.நா.வானது, சீனாவின் 21ஆம் நூற்றாண்டு இனப்படுகொலை விடயத்தினை புறக்கணித்தே வருகின்றது. இந்த விடயத்தில் ஐ.நா. பொதுச்சபை மற்றும் மற்றும் பாதுகாப்புச் சபை ஆகியவற்றின் நடவடிக்கை இல்லாததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது அமைதியாக உள்ளது.
பாசிச சீன அரசாங்கம் உய்குர், கசாக்ஸ், கிர்கிஸ் மற்றும் பிற துருக்கிய மக்களுக்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளாக இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கின்றது’ என்று கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் சமூக அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் ஹைதர் ஜான் கூறினார்.
இதேநேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்காவில் வாழும் உய்குர் வதை முகாமில் இருந்து தப்பிய பெண்ணான துஷனரி ஷியாவுடன், கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள உய்குர்களுக்கும் பிற துருக்கிய மக்களுக்கும் நேரம் முடிந்துவிட்டது’ என்று சுட்டிக்காட்டினார்.
அந்த மக்கள் மீதான சீனாவின் இனப்படுகொலையை அங்கீகரித்து செயல்பட ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடுகடந்த கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கம், கிழக்கு துர்கிஸ்தானில் நடந்து வரும் சீனாவின் இனப்படுகொலைப் பிரசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மனிதாபிமான தலையீடு உட்பட அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஐ.நா இனப்படுகொலை மாநாட்டின் கீழ் அதன் உறுதிமொழிகளை நிலைநிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
உய்குர் மற்றும் பிற துருக்கிய மக்களின் சுதந்திரங்கள், மனித உரிமைகள் மற்றும் இருப்பை உறுதி செய்வதற்கான ஒரே தீர்வு கிழக்கு துர்கிஸ்தானின் சுதந்திரத்தை மீட்டெடுப்பது மட்டுமே என்று நாடுகடந்த கிழக்கு துருக்கிஸ்தான் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.
உய்குர்கள் பெரும்பான்மையான முஸ்லிம் சிறுபான்மை துருக்கிய இனக்குழு ஆகும், அவர்களின் தோற்றம் மத்திய மற்றும் கிழக்கு ஆசியவாகும். இவர்களின் பூர்வீகம் சீன மக்கள் குடியரசில் உள்ள ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியாகக் கருதப்படுகிறது.
ஷின்ஜியாங் தொழில்நுட்ப ரீதியாக சீனாவிற்குள் உள்ளவொரு தன்னாட்சிப் பகுதி. இதனால், உய்குர்கள் முஸ்லிம்கள், மண்டரின் மொழியைத் தங்கள் தாய்மொழியாகப் பேச மாட்டார்கள், மேலும் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வேறுபட்ட இனம் மற்றும் கலாசாரத்தைக் கொண்டுள்ளனர்.
ஆனால், கடந்த சில தசாப்தங்களாக, ஷின்ஜியாங்கிற்கு பொருளாதார செழிப்பு வந்துள்ளதால், அதுபெரும் எண்ணிக்கையிலான ஹான் இன சீனர்களை அங்கு வரவழைத்துள்ளது. இது ஆங்காங்கே வன்முறைக்கு வழிவகுத்தது, 2009 இல் பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியில் 200பேரைக் கொன்ற கலவரத்தில், பெரும்பாலான ஹான் சீனர்கள் கொல்லப்பட்டனர்.
அதனைத்தொடாந்து சீன அதிகாரிகள் கட்டாய உழைப்பு, முறையான கட்டாய பிறப்பு கட்டுப்பாடு ஆகியவற்றை திணித்ததோடு, உய்குர்களை சிறுபான்மையினராக முனைந்த வண்ணமுள்ளனர். எவ்வாறாயினும், ஷின்ஜியாங்கில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சீனா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.