தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமை மற்றும் விளையாட்டுத் துறையில் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் ஆகியன செயற்படுவதற்கான சட்டபூர்வ கட்டமைப்பை வழங்கும் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன.
சட்டமூலம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் அல்லது அவுஸ்ரேலியா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவின் சட்டம் மற்றும் ஊக்கமருந்து சோதனைக் கூடம் அமைக்கப்படும் என்றார்.
ஊக்கமருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களை விசாரிப்பதற்கு இந்தச் சட்டம் அனுமதி வழங்குகிறது.
இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பின் சர்வதேச மாநாட்டில் விளையாட்டில் ஊக்கமருந்து மற்றும் அதனைப் பயன்படுத்துவதை இணங்குவதற்கு எதிராக பிரயோகிக்கப்படவுள்ளது.
விளையாட்டு வீரர்கள், தடகள ஆதரவு பணியாளர்கள் மற்றும் பிற நபர்கள் விளையாட்டுகளில் ஊக்கமருந்துகளில் ஈடுபடுவதை சட்டம் தடைசெய்கிறது.
ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறினால், புள்ளிகள் மற்றும் பரிசுகள் பறிக்கப்படுதல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போட்டி அல்லது நிகழ்வில் பங்கேற்க தகுதியின்மை மற்றும் நிதித் தடைகள் உள்ளிட்டவற்றுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகள் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு தொடர்பான சர்வதேச கடமைகளுக்கு இணங்குவது குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் விளையாட்டில் ஊக்கமருந்து தடுப்புக்கான தேசிய வாரியத்தை நிறுவுவத்திற்கு இந்த சட்டம் இடமளிக்கிறது.
இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்ற பிஜு ஜனதா தளத்தின் அமர் பட்நாயக், பல இந்திய விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கலாம் அவற்றை தெரியாமல் உட்கொள்கின்றனர் என்றார்.
பரிந்துரைக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் பி.டி. உஷா தனது முதல் உரையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஊக்கமருந்து வழக்குகள் கவலையளிப்பதாகவும், இது கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
எமது நாட்டில் ஊக்கமருந்து பற்றி நாங்கள் இன்னும் கண்களைத் திறக்கவில்லை. ஒரு காலத்தில் மூத்த தேசிய மட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவுள்ளது.
ஆகவே தற்போது, இளநிலைக்கல்லூரி மற்றும் பாடசாலைகளும் முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
சி.பி.ஐ.எம்பி ஜோன் பிரிட்டாஸ், விளையாட்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் இந்தியாவில் விளையாட்டுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நீங்கள் உங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்’ என்று அவர் தாக்கூரிடம் கூறினார்.
அத்துடன், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான வளங்களைப் புரிந்து கொள்ள அமைச்சு பி.டி.உஷாவைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.