கர்நாடகாவில் மிகப்பெரும் வர்ததக மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஈகொம் எக்பிரஸ் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த வர்ததக மையமானது, இலத்திரனியல் வர்த்தகத்தை மையப்படுத்தியதாக இயக்கப்படுகின்றது.
கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரும் வர்த்தக மையமானது, இந்தியாவில் மிகவும் முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.
பெங்களுர் ஹோஸ்கோட்டில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய மையமானது, கர்நாடகாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது பல்பொருள் அங்காடியாகும்.
இது பெங்களுர் நுகர்வோருக்கு மிகுந்த சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக உள்ளது.
‘தற்போது நுகர்வோருக்கு பல்வேறு தெரிவுகள் வழங்கப்படுகின்றன, அத்துடன் ஈ-வர்தகக் கடைக்காரர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
இதுவொரு சவாலான முன்மொழிவாகும், ஏனெனில் நடைமுறையில் பொருந்தக்கூடிய சிக்கல்களை நிர்வகிக்கும் திறன் தேவைப்படுகிறது’ என அதன் இணை, இயக்குனர் சத்யநாராயணா கூறினார்.
நாளொன்றுக்கு 8 இலட்சத்திற்கும் மேலான செயலாக்கத் திறனுடன், புதிதாகக் கட்டப்பட்ட வசதி 6 இலட்சம் கன அடிக்கும் மேல் கொள்ளளவைக் கொண்டுள்ளது.
தினசரி வீட்டுப் பொருட்கள் உட்பட பல்வேறு வகைகளில் 10 மில்லியன் தயாரிப்பு அலகுகள் வரை சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.