ஜனாதிபதியின் இலக்குகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ஜனாதிபதி ஆட்சியில் அமர்ந்ததாக தெரிவித்த விஜயவர்தன, எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் நீங்கி நாடு வழமைக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டார்.
அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவன் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுடன் கலந்துரையாடி விவசாயிகளுக்கான உரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் ருவன் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.