ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, 24 மணி நேரத்திற்கு பின்னர் பொதுமக்கள் அமைதியைப் பேணுவதற்காக, முப்படையினரை ஈடுபடுத்த அதிகாரம் வழங்கியுள்ளதாக விமர்சனம் வெளியிட்டார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமான வகையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த போது சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை மீறும் செயல் என இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.