நடிகர் ஜெஹான் அப்புஹாமிக்கு கோட்டை நீதவான் இன்று (திங்கட்கிழமை) பிணை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவுவிட்டது.
ஜூலை மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.