மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்களை தலா ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.