ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுபேச்சுவார்த்தை இன்று(22) இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மீண்டும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.
எனினும், நாடாளுமன்ற முறைமையின் கீழ் எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பிரேரணைகளை ஆதரிக்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுப் பதவிகள் நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளதாகவும், அமைச்சுப் பதவிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுபுறம் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது எனவும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.